internet

img

போலி செய்திகளை கண்டறியும் பணிகளை தொடங்கிய இன்ஸ்டாகிராம்!

போலி செய்திகளை கண்டறியும் பணிகளை, இன்ஸ்டாகிராம் துவங்கி இருக்கிறது. 

போலி செய்திகளை கண்டறியும் அம்சம், ஏற்கனவே ஃபேஸ்புக் தளத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் செயலியும் இணைந்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் போலி செய்திகள் முழுமையாக மறைக்கப்பட்டு அதன் மீது தவறான தகவல் எனும் குறியீடு வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் தவறான தகவலை அணுக வாடிக்கையாளர்களுக்கு ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கும் “See Why” எனும் அம்சமும், பதிவினை பார்க்க வழி செய்யும் “See Post” அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் "See Why" அம்சம் கொண்டு ஏன் அது தவறான தகவல் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள முடியும். மேலும் தவறான தகவல் பற்றி அதிக விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த அம்சம் மூலம் இன்ஸ்டாகிராம் தளத்தில் போலி செய்திகள் பரவுவதை தடுக்க முடியும். 
 

;